கொஞ்சம் ஓவியம் ; கொஞ்சம் இலக்கியம் : நிறைய பொக்கிஷங்கள்!
மேய்ச்சலில் என்னுடன் நீங்களும்

Sunday, May 27, 2012

குமுதம் இதழில் நல்ல நகைச்‌சுவைத் துணுக்குகள் வருவதுண்டு. பழைய குமுதம் இதழில் வெளியான இந்த ஒரு பக்க நகைச்சுவைகள் இப்போது படித்தாலும் புன்னகைக்க வைத்தன என்னை. உங்களுக்கும் சிரிப்பு வருகிறதா என்பதைத் தெரிவிக்கவும். எந்த ஆண்டு வெளியான ஜோக்குகள் இவை என்ற தகவல் ஜோக் பக்கத்திலேயே இருப்பது சிறப்பு.



17 comments:

  1. நானே ராசி நகைச்சுவையாக இருந்தது . சிந்திக்கும் படியாகவும் இருந்தது .சிறந்த முயற்சி எனது பாராட்டுகள் தொடருங்கள் தொடர்கிறோம் . ஓல்ட் இஸ் கோல்ட் .

    ReplyDelete
  2. 187 ரூபாய் 25 பைசாவுக்குள் குடும்பம் நடத்தத் தெரியவேண்டும். எப்போது 1960 இல். இப்போது? 18725 ரூபாய் இருந்தாலும் போதாது. வாடகையே அள்ளுமே.

    நகைச்சுவைகள் அத்தனையும் நல்லகலகலப்புக்குக் குறைவில்லாதவை. அதிலும் ஒவ்வொரு நகைச்சுவையின் தலைப்புமே வித்தியாசமான ரசனையோடு சிறப்பு. பாராட்டுகள் கணேஷ்.

    ReplyDelete
  3. @ சசிகலா...

    ஓல்ட் இஸ் கோல்ட் என்பதுதான் என் கருத்தும் சசி. ந்கைச்சுவையை ரசித்துக் கருத்திட்ட உங்களுக்கு என் மகிழ்வுடன் கூடிய நன்றி!

    @ கீதமஞ்சரி...

    சரியாச் சொன்னீங்க கீதா. இந்தத் துணுக்கைப் படிச்சதுமே என் காதுகள்லருந்து புகை வந்துச்சு இன்னி‌க்கு விலைவாசிய நினைச்சு. ரசனையான பதிவென்று பாராட்டிய உங்களுக்கு என் இதயம் நிறைந்த நன்றி!

    ReplyDelete
  4. @ ஸ்ரீராம்...

    ஆமாம் ஸ்ரீராம். புத்தம் புதுசு. ஆனா மேட்டர்லாம் பழசும் புதுசும் கலந்து. அடிக்கடி வாங்கோ...

    ReplyDelete
  5. வணக்கம் நண்பரே...
    தங்களின் அடுத்த தளத்துக்கு என்
    மனமார்ந்த வாழ்த்துக்கள்...

    மேலும் மேலும் தங்கள் எழுத்துக்களாலும்
    தொகுப்புகளாலும் எண்களை மகிழ்வித்து
    வெற்றி மேவிட
    மேய்ச்சல் மைதானம் உங்களுக்கு
    நல்ல தளமாக விழையட்டும்...

    ReplyDelete
  6. @ மகேந்திரன்...
    நல்வரவு நண்பரே! புதிய மைதானத்திற்கு வந்து என்னை வாழ்த்திய உங்களுக்கு மகிழ்வுடன் கூடிய என் நன்றி!

    ReplyDelete
  7. @ T.N.MURALIDHARAN...

    ரசித்துக் கருத்திட்ட உஙகளுக்கு என் இதயம் நிறைந்த நன்றி முரளிதரன்.

    ReplyDelete
  8. அந்த கால குமுதம் துணுக்குகள் மிகவும் பிரசித்திபெற்றவை. நான் S.S.L.C தேர்வு முடித்து விடுமுறையில் இருக்கும்போது வந்தவை இவை. ஜோக்குகளும் அருமை. அதைவிட தலைப்புகளும் அருமை.இது போன்ற துணுக்குகள் இருந்தால் பதிவிட வேண்டுகின்றேன்.

    ReplyDelete
  9. @ வே.நடனசபாபதி...
    இவைபோன்ற ரசிக்கத் தக்க துணுக்குகள் இன்னும் வர இருக்கிறது நண்பரே. உங்கள் ஆதரவு இருந்தால் நிறைய வரும் உங்களுக்கு என் இதய நன்றி.

    ReplyDelete
  10. இராசி பலன்!
    அருமை!

    சா இராமாநுசம்

    ReplyDelete
  11. @ புலவர் சா இராமாநுசம்...
    அருமையான நகைச்சுவைத் துணுக்கை ரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் உளம் கனிந்த நன்றி!

    ReplyDelete
  12. கத்தரித்தவை.... ரொம்ப நல்லா இருக்கு நண்பரே... தொடருங்கள். ஒரு மணி விளம்பரம் சூப்பர்....

    ReplyDelete
  13. @ வெங்கட் நாகராஜ்...
    இந்தக் காலத்துல படிக்கிறப்ப, அந்தத் துணுக்கை ரொம்பவே ரசிக்க முடியுதில்ல வெங்கட்? தொடர்கிறேன் நண்பா நீங்கள் தரும் ஊக்கத்தால். நன்றி!

    ReplyDelete
  14. கத்தரித்தவை ரொம்ப நல்லா இருக்கு நண்பரே... இவைபோன்ற ரசிக்கத் தக்க துணுக்குகள் இன்னும் தொடருங்கள்.

    ReplyDelete
  15. இப்போது தான் இந்தப் பதிவைப் பார்த்தேன்.

    ஒரு விருப்பம்: ஓவியர் ‘ராஜு’ ஆனந்த விகடனை 1950-இல் விட்டபின், குமுதத்திலும் , கல்கியிலும் சில ஆண்டுகள் படங்கள் வரைந்தார் என்று படித்திருக்கிறேன். விகடனில் ‘ராஜு’ வரைந்தவை நிறையப் பார்த்திருக்கிறேன்; வைத்தும் இருக்கிறேன். ஆனால், குமுதத்திலோ, கல்கியிலோ அவர் வரைந்தது ஒன்றும் எனக்கு நினைவும் இல்லை. உங்களிடம் அவற்றில் ஏதேனும் இருந்தால் இங்கே போடவும்.

    ReplyDelete